கழிவறையில் நுழைவதின் வெளியேறுவதின் ஒழுங்கு - எந்த கால் முதலில்


கழிவறையில் நுழைவதின் வெளியேறுவதின் ஒழுங்கு - எந்த கால் முதலில் 


கழிவறையிலோ இயற்க்கை உபாதைகளை வெளியேற்ற செல்லும் பொழுதோ இடது காலை வைத்து நுழைவது விரும்பத்தக்கது ஆகும். அதே போல் கழிவறையில் இருந்து வெளியேறும் பொழுது வலது காலை முதலில் வைக்க வேண்டும். 

நான்கு மதுஹப்களின் ஒருமித்த கருத்து இது தான். ஹனபி, மாலிக்கி, ஷாபி மற்றும் ஹம்பலி எல்லோரும் இந்த கருத்தை ஒப்புக்கொள்கிறார்கள். 

அல்-ஹாபித் அந்-நவவி رحمه الله கூறினார்கள் ,” இந்த பழக்கத்தை அறிஞர்கள் ஏகோபித்தமாக வலியுறுத்துகிறார்கள். நல்லொழுக்கமான காரியங்களுக்கு இடது பாகத்தை விட வலது பாகம் கொண்டு செய்ய வேண்டும் என்பது நிர்ணயிக்கப்பட்ட சட்டமாகும்.  “2/77 المجموع”

எல்லா நல்லொழுக்கமான காரியங்களிலும் வலதுபுறத்தை தேர்வு செய்ய வேண்டும் என்று ஹதீதில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆயிஷா رضي الله عنها குறிப்பிடுகிறார்கள், 

كان النبيُّ صلَّى الله عليه و سلم يُحِبُّ التَّيَمُّنَ ما استَطاعَ، في طُهُورهِ وتَنَعُّلِه وتَرجُّلِه في شأنِه كُلِّه

“ நபி ﷺ தங்களை தூய்மை படுத்தும் பொழுது, காலணிகள் அணியும் பொழுது , தலை சீவும் பொழுது மற்றும் தன்னுடைய அனைத்து செயல்களிலும் ( நல்ல, நல்லொழுக்கம் உள்ள, அழகான செயல்கள் ) தன்னால் முடிந்த வரை வலதுபுறம் கொண்டு துவங்குபவர்களாக இருந்தார்கள் “.
இமாம் புஹாரி இந்த ஹதீதை பதிவு செய்துள்ளார்கள் 5380 .

ஆகவே, ஹதீதில் குறிப்பிட்டுள்ள செயல்கள் மற்றும் அனைத்து நல்லமல்களையும் இடதுபுறத்தை விட வலதுபுறம் கொண்டு துவங்குவது பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

தமிழில் அபூ முஹம்மது அபூபக்கர் கோவை

Source :- albayaanmv.com/?p=801

Comments