வீட்டில் தனியாக தொழும்போது , பாங்கு ( தொழுகைக்கான அழைப்பு ) மற்றும் இகாமத் கூறுவதற்கான சட்டம் என்ன?

கேள்வி : வீட்டில் தனியாக தொழும்போது , பாங்கு ( தொழுகைக்கான அழைப்பு ) மற்றும் இகாமத் கூறுவதற்கான சட்டம் என்ன? கேள்வியாளர் இன்றைய சோகமான சூழ்நிலையில் வீட்டில் தொழும் பொழுது கூறவேண்டியது பற்றி கேட்கிறார் என்று எண்ணுகிறேன். மஸ்ஜிதில் ஜமாத் தொழுகையை தவற விட ஆரோக்கியமான எந்த ஆணுக்கும் அனுமதி இல்லை. அவருக்கு இது கடமையாகும். இதன் பிறகு, தனியாக தொழும்பொழுது, மஸ்ஜிதில் அல்லாமல், பாங்கும் இகாமத்தும் கூறுவது பரிந்துரைக்கப் பட்டதாகும். பெரும்பாலான அறிஞர்களின் கருத்து இதுவாகும். ஹனபி, ஷாஃபி, ஹம்பலி மற்றும் மாலிக்கி மத்ஹப்களின் கருத்தும் இதுவேயாகும். இது பரிந்துரைக்கப்பட்டது என்பதற்கு அவர்கள் கூறும் ஆதாரங்கள் : அபூ-ஸயீத் அல் குத்ரீ رضي الله عنه அறிவிப்பதாவது “ (இந்த ஸஹாபா தனது தோழரிடம் கூறினார்கள்) உன்னுடைய மந்தையை பாதியாவின் வெளியில் மேய்ப்பது உனக்கு விருப்பமானது என்று நான் அறிவேன். நீ உன்னுடைய ஆடுகளுடன் நகரத்தின் வெளியில் இருக்கும் பொழுது சப்தமாக பாங்கு கூறுவீராக. நிச்சயமாக நான் நபி ﷺ கூற கேட்டேன், “ ஜின்களும் மனிதர்களும் ஏனைய படைப்பினங்களு...